மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பி வெட்டி கொலை… அண்ணன் வெறிச்செயல்…! திருவள்ளூரை அதிர வைத்த சம்பவம்…

Author: kavin kumar
21 January 2022, 4:53 pm

திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பியை அண்ணன் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகேயுள்ள கெட்டனமல்லியில் ஏழுமலை என்பவரது மகன் சுரேஷ் வயது (35). அவரது அண்ணன் என்கிற சுப்பிரமணி(45) என்பவரும் சென்டரிங் கம்பிகட்டும் கூலிதொழி் செய்து வருகின்றனர். இந்த நிலையில் சுரேஷ் வீட்டிற்கு வந்த அவரது அண்ணன் சுப்பிரமணி நள்ளிரவில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் அவரை கோடாரியால் வெட்டியுள்ளார். இதில் சுரேஷிற்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கவரைப்பேட்டை போலீசார் சுரேஷை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அப்போது செல்லும் வழியிலேயே சுரேஷ்குமார் பரிதாபமாக உயிர் இழந்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த கவரபேட்டை போலீசார் சுப்பிரமணியை சம்பவ இடத்திலேயே கைது செய்தனர். .

  • Varun Dhawan Keerthy Suresh viral video அட்லீ போனை பார்த்து கீர்த்தி சுரேஷ் அதிர்ச்சி…ஒரு டைரக்டர்-க்கு உண்டான மரியாதையே போச்சு…!
  • Views: - 11109

    0

    0