நடிகருக்கு இணையாக சம்பளம் கேட்கும் விஜய் பட இயக்குனர்..! அதிர்ச்சியில் தயாரிப்பாளர்கள்..!

Author: Rajesh
22 January 2022, 1:21 pm

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். திரைபடத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்த படத்திற்கு முன்னர் இயக்குனர் நெல்சன் இயக்கிய டாக்டர் திரைபடமும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது.


தற்போது, முன்னணி நடிகர்கள் பலரும் இவரின் இயக்கத்தில் நடிப்பதற்கு மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாகவும் இதனால் அவருடைய சம்பளத்தை 30 கோடியாக உயர்த்தி உள்ளாதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


டாக்டர் படத்தில் நடிப்பதற்கு சிவகார்த்திகேயனுக்கு 30 கோடி சம்பளம் பேசப்பட்டதாகவும், தற்போது டாக்டர் படத்தின் இயக்குனர் நெல்சன், சிவகார்த்திகேயனுக்கு இணையாக 30 கோடி சம்பளத்தை உயர்த்தி இருப்பது சினிமா உலகில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
தன்னிடம் வரும் தயாரிப்பாளர்கள் 30 கோடி ரூபாயுடன் தான் வர வேண்டும் என இயக்குனர் நெல்சன் கேட்டு வருகிறாராம்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்