அகமதாபாத், லக்னோ அணியில் இடம்பெற்ற பிரபல வீரர்கள்… அடிப்படை விலை ரூ.2 கோடிக்கு இத்தனை வீரர்களா..? யார் யார் தெரியுமா..?

Author: Babu Lakshmanan
22 January 2022, 6:00 pm

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக கடுமையான மருத்துவக் கட்டுப்பாடுகளுடன் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்றது. இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதுநாள் வரை 8 அணிகள் மட்டுமே பங்கேற்று வந்த நிலையில், இனி கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

அகமதாபாத், லக்னோ அணிகள் சேர்க்கப்பட்டு, ஐபிஎல் அணிகளுக்கான பெரிய ஏலமும் நடைபெற இருக்கிறது. இதில், 1,200க்கும் மேற்பட்ட வீரர்கள் பதிவு செய்துள்ளன. ஐபிஎல் அணிகளும் வீரர்களை தக்க வைத்துக் கொண்டு, வீரர்களை வெளிவிட்டுள்ளது. எனவே, எந்த வீரர்கள் எந்த அணியில் இடம்பெற இருக்கிறார்கள் என்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், அகமதாபாத் அணியில் ஹர்திக் பாண்டியா, ரஷித்கான், சுப்மன் கில் ஆகியோரும், லக்னோ அணியில் கேஎல் ராகுல், ஸ்டொயினிஸ், ரவி பிஷ்னோய் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஏலத்தில் அடிப்படை விலை ரூ.2 கோடியை பெற்று பல வீரர்கள் உள்ளனர். அவர்களின் விபரம் பின்வருமாறு :-

இந்திய வீரர்கள்‌ :- அஸ்வின்‌, சஹால்‌, தீபக்‌ சஹார்‌, ஷிகர்‌ தவன்‌, ஷ்ரேயஸ்‌ ஐயர்‌, தினேஷ்‌ கார்த்திக்‌, இஷான்‌ கிஷன்‌, புவனேஸ்வர்‌ குமார்‌, தேவ்தத்‌ படிக்கல்‌, கிருனால்‌ பாண்டியா, ஹர்ஷல்‌ படேல்‌, சுரேஷ்‌ ரெய்னா, அம்பட்டி ராயுடு, முகமது ஷமி, ஷர்துல்‌ தாக்குர்‌, ராபின்‌ உத்தப்பா, உமேஷ்‌ யாதவ்‌.

வெளிநாட்டு வீரர்களின் விபரம் : – முஜீப்‌, அஷ்டன்‌ அகர்‌, நாதன்‌ கோல்டர்‌ நைல்‌, பேட்‌ கம்மின்ஸ்‌, ஜோஷ்‌ ஹேசில்வுட்‌, மிட்செல்‌ மார்ஷ்‌, ஸ்டீவ்‌ ஸ்மித்‌, மேத்யூ வேட்‌, டேவிட்‌ வார்னர்‌, ஆடம்‌ ஸாம்பா, ஷகிப்‌ அல்‌ ஹசன்‌, முஸ்தாபிசுர்‌ ரஹ்மான்‌, சாம்‌ பில்லிங்ஸ்‌, சகிப்‌ முகமது, கிறிஸ்‌ ஜார்டன்‌, கிரைக்‌ ஓவர்டன்‌, அடில்‌ ரஷித்‌, ஜேசன்‌ ராய்‌, ஜேம்ஸ்‌ வின்ஸ்‌, டேவிட்‌ வில்லி, மார்க்‌ வுட்‌, டிரெண்ட்‌
போல்ட்‌, லாகி ஃபர்குசன்‌, குயிண்டன்‌ டி காக்‌, மர்சண்ட்‌ டி லேஞ்ச்‌, டு பிளெஸ்சிஸ்‌, ரபாடா, இம்ரான்‌ தாஹிர்‌, ஃபேபியன்‌ ஆலன்‌, டுவைன்‌ பிராவோ, எவின்‌ லூயிஸ்‌, ஓடியன்‌ ஸ்மித்‌, ஆகியோர் உள்ளனர்.

இதனிடையே, ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பார்வையாளர்களின்றி இந்தியாவிலேயே நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. புனே மற்றும் மும்பையில் போட்டிகளை நடத்த முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 9408

    0

    0