கொங்கு மண்டலத்தில் அதிகரித்த கொரோனா.. கோவையில் 4 ஆயிரத்தை நெருங்கும் பாதிப்பு : இன்றைய தமிழக நிலவரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 January 2022, 8:00 pm

சென்னை: தமிழகத்தில் மேலும் 30,744 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேலும் 30,744 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31 லட்சத்து 03 ஆயிரத்து 410 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 697 ஆக அதிகரித்துள்ளது. இன்று 33 பேர் உயிரிழந்துள்ளார்.

இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து 178 ஆக அதிகரித்துள்ளது. இன்று 23,372 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 28 லட்சத்து 71 ஆயிரத்து 535 ஆக அதிகரித்துள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் 6,452 பேருக்கும், இதற்கு அடுத்தபடியாக கோவையில் 3,886 பேருக்கும், மூன்றாவது இடத்தில் செங்கல்பட்டில் 2,377 பேருக்கும், கன்னியாகுமரியில் 1,266 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருப்பூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதிப்பு பதிவாகியுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 8341

    0

    0