அன்று நிராகரிக்கப்பட்ட சிம்பு ..!இன்று அவரிடமே.. கெத்து காட்டும் சிம்பு..!

Author: Rajesh
23 January 2022, 1:01 pm

நடிகர் சிம்பு, தற்போது பத்து தல, கொரோனா குமார் மற்றும் வெந்து தணிந்தது காடு படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே, சிம்புவின் வாலு படத்திற்கு பிறகு, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் படம் எடுக்க இருந்த நிலையி;ல், சிம்புவின் உடல் எடை கூடி நடிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்தார் என தகவல் பரவியது. மேலும் அவர் சூட்டிங் ஸ்பாட்டுக்கு சரியாக வருவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இதனால் ஏஜிஎஸ் நிறுவனம் அப்போது இருக்கும் சிம்புவை வைத்து படம் தயாரிக்காமல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய அளவில் மக்களிடம் வரவேற்பை பெற்றது. இதனால் சிம்புவிற்கு அடுத்து அடுத்து படங்களில் நடிக்க ஆர்வம் அதிகரித்துள்ளது.
இதனிடையே, சிம்புவிடம் ‘ஓ மை கடவுளே’ படத்தின் இயக்குனர் கூறியுள்ள கதை சிம்புவிற்கு பிடித்துள்ளதாக தெரிகிறது. மேலும் சிம்புவுடன் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து உள்ளதால், கூடிய விரைவில் சிம்புவின் நடிப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் ஒரு புதிய படத்தை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிம்புவின் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளிவர உள்ளதால் சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

  • good bad ugly trailer release on 4th april டிரைலரும் ரெடி, மூணாவது சிங்கிளும் ரெடி! குட் பேட் அக்லி திரைப்படத்தின் மாஸ் அப்டேட்…