ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் வீட்டில் நடந்த கொள்ளையில் திருப்பம் : 63 சவரன் நகையுடன் ஒருவன் கைது.. எஸ்கேப் ஆன பெண்!!
Author: Udayachandran RadhaKrishnan23 January 2022, 3:20 pm
மதுரை : திருமங்கலத்தில் ஓய்வு பெற்ற கூட்டுறவு வங்கி மேலாளர் வீட்டில், கொள்ளையடித்த 63 சவரன் தங்க நகைகள் மீட்ட போலீசார் ஒருவரை கைது செய்து மேலம் ஒரு பெண்ணை தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் உள்ள கிறிஸ்டியன் காலனி பகுதியில், ஓய்வு பெற்ற கூட்டுறவு வங்கி மேலாளர் திருமாவளவன், கடந்த மாதம் 24ஆம் தேதி வீட்டில் இருந்து தனது குடும்பத்துடன் வெளியில் சென்றிருந்த நேரத்தை அறிந்து , பட்டப்பகலில் வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் , வீட்டின் பீரோவில் இருந்த 63 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ 1.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து அங்கிருந்து தப்பிச் சென்றனர் .
இச்சம்பவம் குறித்து திருமங்கலம் போலீசார் தனிப்படை அமைத்து சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் தொடர்ந்து குற்றவாளிகளை கண்காணித்து வந்தது .
இதில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த முத்துராஜ் (வயது 30) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 63 சவரன் தங்க நகைகளை மீட்டுள்ளனர். மேலும் இக் கொலைச் சம்பவத்தில் துணைபோன கீர்த்தனா என்ற பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கொள்ளை போன ரூபாய் 1.5 லட்சம் பணம் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனிப்படை போலீசார் துரிதமாக செயல்பட்டு கொள்ளையர்களை பிடித்த சம்பவம் , போலீஸ் அதிகாரிகளால் தனிப்படை போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் கொள்ளையன் முத்துராஜ் மீது பல்வேறு கொள்ளை வழக்குகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது