இந்தியா கேட்டில் ஒளிர்ந்த நேதாஜி சிலை : முப்பரிமாண ஒளி வடிவிலான லேசர் சிலையை திறந்த பிரதமர் மோடி!!

Author: Udayachandran RadhaKrishnan
23 January 2022, 7:16 pm

டெல்லி : நேதாஜியின் முப்பரிமாண ஒளிவடிவிலான சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 125 வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேதாஜியின் நேதாஜியின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு நேதாஜி பெயரிலான விருதுகளை பிரதமர் மோடி வழங்கினார். மேலும், இந்தியா கேட் பகுதியில் நேதாஜியின் முப்பரிமாண லேசர் சிலையையும் அவர் திறந்து வைத்தார்.

ஏற்கெனவே பிரதமர் மோடி நேதாஜிக்கு கிரானைட்டால் ஆன பிரம்மாண்ட சிலை இந்தியா கேட்டில் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். புதிய கிரானைட் சிலை அமைக்கப்படும் வரை இந்த லேசர் முறையிலான முப்பரிமாண நேதாஜி சிலை இந்தியா கேட்டில் ஒளிரும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 7131

    0

    0