யானை தந்தங்களை விற்க முயன்ற 9 பேர் கைது : 2 யானை தந்தங்கள் பறிமுதல்

Author: kavin kumar
23 January 2022, 7:52 pm

தேனி : தேனியில் யானை தந்தங்களை விற்க முயன்ற 9 பேரை வனத்துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்த 2 யானை தந்தங்கள் பறிமுதல் செய்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் – வத்தலகுண்டு சாலையில், யானை தந்தங்கள் கடத்தி வந்து விற்பனை செய்வதாக முன்னாள் வனத்துறை அதிகாரி தேவதானப்பட்டி வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து வனச்சரக அதிகாரி தலைமையில் 25க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தேனி மாவட்ட எலைகை பகுதியில் சந்தேகிக்கும் படி நின்றவர்களிடம் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் 2 யானை தந்தங்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அங்கு இருந்தவர்களை கைது செய்ய முயன்றபோது வனக்காவலர் கருப்பையா என்பவரை தாக்கியுள்ளனர். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவர், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து 2 யானை தந்தங்களை விற்பனை செய்ய முயன்றதாக தேவதானபட்டி பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் , பிரகாஷ் , பாக்கியராசு , முத்தையா , உசிலம்பட்டியைச் சேர்ந்த சின்னராசு , சிவக்குமார் , தேனியைச் சேர்ந்த சரத்குமார், விஜயக்குமார் மற்றும் வத்தலகுண்டைச் சேர்ந்த அப்துல்லா ஆகிய 9 நபர்களை கைது செய்து தேவதனப்பட்டி வனச்சரக அலுலகத்தி வைத்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வனக் காவலரை அடித்து தள்ளிவிட்டு தப்பியோடிய சுரேஷ் எனபவரை வனத் துறையினர் தேடி வருகின்றனர்.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 6631

    0

    0