தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம்… மாணவர்களிடம் விசாரணையை தொடங்க முடிவு : அமைச்சர் அன்பில் மகேஷ்!!

Author: Babu Lakshmanan
24 January 2022, 1:15 pm

சென்னை: தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய தண்டனை பெற்றுத் தரப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அன்பில் மகேஷ் கூறியதாவது :- தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய தண்டனை பெற்றுத் தரப்படும். இதுபோன்று இனி வரும் காலங்களில் நடக்கக் கூடாது. மதமாற்றம் தொடர்பாக மாணவர்களிடம் கருத்துக் கேட்கப்படும். மேலும், மாணவி தற்கொலை தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை சார்பில் குழு விசாரணை நடைபெறும். காவல்துறை விசாரணை மட்டுமின்றி பள்ளிக் கல்வித் துறை சார்பிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

எனவே தயவு கூர்ந்து, தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தை யாரும் அரசியலாக்க வேண்டாம். மேலும், பல்வேறு அமைப்புகள் குற்றம்சாட்டும் மதமாற்ற குற்றச்சாட்டை, விசாரணையின் போது யாருமே சொல்லவில்லை. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பள்ளியில் ஏற்கனவே தேர்ச்சி பெற்ற மாணவர்களிடமிருந்தும், தற்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களிடமிருந்தும் கருத்துகள் பெறப்பட்டு வருகின்றன, என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

  • Ajith helps without making a sound… President Draupadi Murmu praises him! சத்தமே இல்லாமல் உதவி செய்யும் அஜித்… குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பாராட்டு!