சென்ற இடமெல்லாம் ஜெயம் : விருதுகளை அள்ளிய ஜெய்பீம்.. ஆஸ்கரால் புதிய சாதனைக்கு தயாராகும் தமிழ் சினிமா!!

Author: Udayachandran RadhaKrishnan
24 January 2022, 1:49 pm

ஒரு திரைப்படம் உருவாகி வெளியாவது என்பது சுலபமான காரியமல்ல. தாய் குழந்தையை பெற்றெடுப்பதற்கு சமம் என தயாரிப்பாளர், இயக்குநர்கள் முதல் படக்குழுவே இந்த கூற்றை ஒப்புக்கொள்ளும்.

அப்படி உருவான படங்கள் தரமாக இருந்தாலும் மக்கள் மனதில் பதிய தவறிவிடுகின்றன. அதே போல ஒரு படம் திரையரங்குகளில் ரிலீசாகாமல் போனால் அதில் ஏற்படும் நஷ்டம் மரணத்தை விட கொடுமையானது.

இதையெல்லாம் தாண்டி கொரோனா என்னும் பேரிடரால் ஓடிடி தளத்தில் வெளியான படம் தான் ஜெய்பீம். உண்மைக்கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டம் படம் ஜெய்பீம். படத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய போதும், வெற்றிக்கனியை சுவைத்தது.

9th Noida Internation Film Festival வெற்றியாளர்களின் முழு விவரம்

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வழக்கறிஞர் சந்துரு போராடிய கதையை கையில் எடுத்த இயக்குநர் ஞானவேல், அருமையான கதாபாத்திரங்களை தேர்வு செய்து கோட்டையில் கொடி நாட்டியுள்ளார்.

படம் வெளியானது முதல் தமிழ் ரசிகர்களால் புடை சூழப்பட்ட ஜெய்பீம் திரைப்படம் ஆஸ்கர் தகுதி பட்டியிலில் தேர்வானது உலக தமிழர்களால் வெகுவாக பேசப்பட்டு வருகிறது. அதுவும் உலக சினிமாவின் உயரிய விருதான ஆஸ்கர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் ஜெய்பீம் படக்காட்சி இடம்பெற்றது, உலக சினிமா ரசிகர்களையே தமிழ் சினிமா பக்கம் திரும்பி பார்க்க வைத்தது என்பதே நிதர்சனமான உண்மை.

நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை அள்ளி குவித்த ஜெய்பீம் ||  Tamil cinema jai bhim movie got 3 awards in noida

இந்த நிலையில் நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில் ஜெய்பீம் படம் மூன்று விருதுகளை குவித்துள்ளது. சிறந்த நடிகருக்காக சூர்யா, சிறந்த நடிகைக்காக லிஜோமோல் ஜோஸ், சிறந்த படம் என 3 பிரிவுகளில் விருதை வென்று அசத்தியுள்ளது.

Suriya's critically acclaimed Jai Bhim listed eligible for the prestigious  Oscar Award! - Tamil News - IndiaGlitz.com

தனை அடுத்து படக்குழுவினருக்கு திரையுலக பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒரு வேளை ஆஸ்கர் விருதில் ஜெய்பீம் படத்திற்கு விருது கிடைத்தால் தமிழ் சினிமா புதிய அத்தியாயத்தை பதிக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

Jai Bhim Full Movie Download From Movierulz | Jai Bhim Movie Download  Telegram | Jai Bhim Download On Isaimini - Filmibeat
  • Jayam Ravi Aarthi Couple Compromise in Court ஜெயம் ரவி காலில் விழுந்தாரா ஆர்த்தி? ஒரு மணி நேரம் நடந்த சந்திப்பில் சமரசம்!
  • Views: - 6451

    8

    0