தேசிய கீதத்தின் போது ‘சூயிங் கம்’ மென்ற விராட் கோலி: வைரலாகும் வீடியோவால் கிளம்பிய சர்ச்சை..!!

Author: Rajesh
24 January 2022, 2:58 pm

கேப்டவுன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி தொடங்குவதற்கு முன் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது விராட் கோலி சூயிங் கம் மெல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நேற்று நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுடனான 3 ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. கேப் டவுனில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து பேட் செய்ய களமிறங்கிய தென்னாப்ரிக்கா அணியின் டிகாக்கின் சதம் அடித்தார்.

அதேபோல் வேண்டர் டசன், மில்லர் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் அந்த அணி 287 ரன்கள் சேர்த்து ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்களும், தீபக் சஹார் மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

போட்டி தொடங்குவதற்கு முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தேசிய கீதம் இசைக்கும்போது சூயிங் கம் மெல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ட்விட்டரில் வைரலாக பரப்பப்படும் இந்த வீடியோ கிளிப்பில், இந்தியாவின் மற்ற அணி வீரர்கள் போல் கோலி தேசிய கீதம் பாடாமல் சூயிங் கம் மெல்லும் காட்சி இடம்பெற்றுள்ளது.

  • first day collection of Ajith's Good Bad Ugly Movie தல சுற்ற வைக்கும் GBU முதல் நாள் வசூல் வேட்டை… எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா?