தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் : கரூரில் இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
Author: Babu Lakshmanan24 January 2022, 5:39 pm
தஞ்சையில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று கரூரி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி லாவண்யாவின் தற்கொலை விவகாரத்தில் மாணவியின் தற்கொலைக்கு காரணம் கட்டாய மத மாற்றம் தான் எனக் கூறி குற்றம் சாட்டிய இந்து முன்னணியினர், கரூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள தபால் தந்தி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி தமிழக காவல்துறை மற்றும் தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணி மற்றும் கரூர் மாவட்ட பாஜக நிர்வாகிகள் சுமார் 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். தமிழகத்தில் கட்டாய மதமாற்றச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்றும், பல்வேறு கோரிக்கை பதாதைகளை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.