மீண்டும் ஐட்டம் பாடலில் சமந்தா : இந்த பிரபலத்துடனா? அப்ப அந்த காட்சிக்கு பஞ்சமே இருக்காது!!
Author: Udayachandran RadhaKrishnan25 January 2022, 2:23 pm
ஊ சொல்றியா மாமா என்ற பாடல் பட்டி தொட்டி முதல் உலகம் முழுவதும் பயங்கர பிரபலமானது. அதுவும் முதன்முறையாக ஐட்டம் பாடலுக்கு சமந்தா நடனமாடியதால் பாடலுக்கு பயங்க எதிர்பார்ப்பு.
படமும் ரிலீசாகி பாடலுக்கு செம வரவேற்பு கிடைத்தது. அதுவும் அல்லு அர்ஜூனும் சமந்தாவும் இணைந்து ஆடிய நடனத்துக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்தனர். படமும் ஹிட் அடித்தது.
முதன்முதலாக குத்தாட்டம் போட்ட சமந்தா ஒரு பாடலுக்காக கோடிகளில் சம்பளம் வாங்கியதா கூறப்படுகிறது. பாடலுக்கு ஒரு பக்கம் சர்ச்சை எழுந்தாலும், மறுபக்கம் அமோக வரவேற்பு கிடைத்தது.
இளைஞர்களை உலுக்கிய ஊ சொல்றியா மாமா பாடல் யூடியூப்பில் மில்லியன் பார்வையாளர்களை கடந்து கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மீண்டும் குத்து சாங்குக்கு நடனமாட சமந்தா தயாராகியுள்ளார்.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாக உள்ள PAN INDIA படமான லிகர் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆட சமந்தாவுக்கு அழைப்பு வந்துள்ளது. சமந்தாவும் மறுக்காமல் அழைப்பை ஏற்றுள்ளார்.
புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா பாடலை போலவே இந்த பாடலும் உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வரும் என கூறப்படும் நிலையில், சமந்தா ஹாலிவுட்டிலும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதை சமந்தா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.