தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு..? மருத்துவ நிபுணர்களுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை

Author: kavin kumar
25 January 2022, 9:12 pm

சென்னை : தமிழகத்தில் இரவு ஊரடங்கு நீடிப்பது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை மறுநாள் ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கோவில்கள், மசூதிகள், சர்ச்சுகள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் வரும் 31ந்தேதியுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கு நீடிப்பது குறித்து நிபுணர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையில், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு ஆகியவற்றை நீட்டிப்பது நீட்டிப்பது அல்லது தளர்வுகள் அளிப்பது ஆகியவை பற்றியும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

  • Actor Vinayakan controversy போதையில் செய்த அடாவடி…என்னால சமாளிக்க முடியல…மன்னிப்பு கேட்ட விநாயகன்…!