கோவையில் குடியரசு தின விழா : தேசியக்கொடி ஏற்றி 109 பேருக்கு பதக்கங்களை வழங்கிய மாவட்ட ஆட்சியர்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 January 2022, 9:45 am

கோவை: நாடு முழுவதும் 73வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டது.

கோவை வ உ சி மைதானத்தில் நடந்தகுடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் சமீரன் சமீரன் கலந்து கொண்டு காலை தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
பின்னர் முவண்ண கலர் பலூன் மற்றும் புறாவை பறக்க விட்டார். கோவை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசார் 109 பேருக்கு முதல் அமைச்சரின் பதக்கங்களை கலெக்டர் அணிவித்து பாராட்டினார்.

தொடர்ந்து கோவை மாவட்டத்தில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா உள்பட டாக்டர்கள் செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், இஎஸ்ஐ மருத்துவமனை டீன் ரவிந்திரன் டாக்டர்கள், செவிலியர்கள் மருத்துவப் பணியாளர்கள் சுகாதாரப் பணியாளர்கள் , அரசு அதிகாரிகள் தூய்மைப் பணியாளர்கள் உள்பட 303 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் சமீரன் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வனகரதினம் மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் துணை கமிஷனர்கள் உமா ஜெயச்சந்திரன் செல்வராஜ் உள்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கொரோனா பரவல் காரணமாக பள்ளி கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற வில்லை குடியரசு தின விழாவைக் காண பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. குடியரசு தினவிழாவையொட்டி மைதானம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது வாரிசுகளுக்கு நினைவு பரிசுகள் அந்தந்த பகுதியில் உள்ள தாசில்தார் கள்ள மூலமாக சான்றிதழ்களும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  • sai abhyankkar is the music director for allu arjun atlee project அட்லீ-அல்லு அர்ஜுன் படத்துக்கு இவர்தான் மியூசிக்கா? பிளாஸ்ட்டா இருக்கே!