73 நிமிடம் சிலம்பம் சுற்றிய 73 மாணவர்கள்… இந்திய புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்டு சாதனை படைத்த மாணவர்கள்…!
Author: kavin kumar26 January 2022, 3:02 pm
திருவள்ளுர் : 73வது குடியரசு தினவிழாவையொட்டி மூவர்ணக் கொடிவண்ணத்தில் தொடர்ச்சியாக 73 நிமிடம் 73 நொடிகள் சிலம்பம் சுற்றி 73 மாணவர்கள் இந்திய புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்டு சாதனை புரிந்தனர்.
திருவள்ளுர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த வடகரை ஆதிதிராவிடர் மேல் நிலைபள்ளி அரசினர் தொழில் பயிற்சி வளாகத்தில் 73 வது தினவிழாவையொட்டி தமிழரின் பாரம்பரிய சிலம்ப கலை மூலம் 73 சிலம்பாட்ட மாணவர்கள் 73 நிமிடம் 73 நொடிகள் மூவர்ண கொடி நிறத்தில் தொடர்ச்சியாக இடைவிடாமல் சிலம்பம் சுற்றி கொரோனா விதிகளுக்கு உட்பட்டு சாதனை நிகழ்த்தினர்.
இந்நிகழ்வை இந்தியா புக்ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் மேனேஜிங் டைரக்டர் சதாம் உசேன் துவக்கி வைத்தார். இதில் திருவள்ளூர் மாவட்ட தமிழ்நாடு சிலம்ப சங்க செயலாளர் ஹரிதாஸ், சிலம்ப ஆசான் ரதிராஜா மற்றும் ஆண்டணி உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டு பாராட்டு சான்று மற்றும் பதக்கங்களை வழங்கினர். மாணவர்கள் நிறுத்தாமல் தொடர்ந்து இந்த சாதனை இந்திய புக்ஆப் வேல்ட் ரிக்கார்ட் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது.