வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடர்… இந்திய அணி அறிவிப்பு : ஆல் ரவுண்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த தேர்வர்கள்…!!

Author: Babu Lakshmanan
27 January 2022, 12:18 pm

தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய கிரிக்கெட் அணி, டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்ததோடு, ஒருநாள் தொடரில் ஒயிட் வாஷ் ஆகி அதிர்ச்சி கொடுத்தது. இதைத் தொடர்ந்து, இந்திய அணி வெஸ்ட் இண்டீசுடன் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. அகமதாபாத் மற்றும் புனேவில் இந்தத் தொடர் நடைபெற இருக்கிறது.

இரு அணிகளுக்கு இடையே பிப்ரவரி 6, 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகளும், பிப்வரி 16, 18, 20 ஆகிய தேதிகளில் 3 டி20 போட்டிகளும் நடக்கவுள்ளன.

இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் ருத்ராஜ் கெயிக்வாட் வாய்ப்பு கிடைக்கவில்லை. மிடில் ஆர்டரில் விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் ஆகிய வீரர்கள் உள்ளனர். ஸ்பின்னர்களாக யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய், அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர் ஆகிய நால்வரும் இடம்பிடித்துள்ளனர். பும்ரா, ஷமிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. ஃபாஸ்ட் பவுலர்களாக முகமது சிராஜ், புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் எடுக்கப்பட்டுள்ளனர்.

ஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், ரவி பிஷ்னோய், அக்ஸர் படேல், யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான், ஹர்ஷல் படேல்.

  • vetrimaaran give voice over for harish kalyan diesel movie ஹரிஷ் கல்யாண் படத்தில் வெற்றிமாறனின் இன்னொரு அவதாரம்? வேற லெவல்ல இருக்கப்போது…