நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் விறுவிறு: கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு..!!
Author: Rajesh28 January 2022, 3:01 pm
கோவை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியுள்ள நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது. இந்த வேட்புமனு தாக்கல் காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேட்புமனு தாக்கலை பெறுவதற்காக மண்டல வாரியாக தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவையை பொறுத்தவரை கோவை மாநகர பகுதியில் உள்ள 100வார்டுகளுக்கு 5 இடங்களில் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல கோவை புறநகர் பகுதியில் உள்ள 7நகராட்சிகள்,33பேரூராட்சிகள், அந்த அந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தலுக்காக வேட்புமனு பெறுவதற்காகவும், தாக்கல் செய்வதற்காகவும் இன்று காலை முதலே விறு விறுப்பாக துவங்கியுள்ளது.
இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்யும் கோவை மாநகராட்சி மத்திய மண்டல தேர்தல் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.