நடிகர் சிம்பு கெளதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வரும் சிம்பு அடுத்த பத்து தலஇ கொரோனா குமார் ஆகிய படங்களை முடித்து விட்டு அஷ்வத் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை ஏ.ஜி.எஸ்.நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ள நிலையில். சிம்புவுக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இறுதி சுற்று என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை ரித்திகா சிங். தொடர்ந்து ஆண்வன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.