கோவையில் மகாத்மா காந்தி நினைவு மதநல்லிணக்க பாதுகாப்பு நாள் கருத்தரங்கம்
Author: kavin kumar29 January 2022, 9:59 pm
கோவை: இந்திய கலாச்சார நட்புறவுக் கழகம் மற்றும் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக கோவையில் மகாத்மா காந்தி நினைவு மதநல்லிணக்க பாதுகாப்பு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
அன்பே கடவுள் என்பதையே தனது வாழ் நெறியாகக் கொண்டு வாழ்ந்த மகாத்மா காந்தியடிகளின் நினைவு நாளான ஜனவரி 30ஆம் தேதி முன்னிட்டு கோவையில் மகாத்மா காந்தி நினைவு மதநல்லிணக்க பாதுகாப்பு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் இஸ்காப் மாநில பொது செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பல்சமய நல்லுறவு இயக்கத்தின் மாநிலத் தலைவர் முகம்மது ரஃபி அனைவரையும் துவக்க உரையாற்றினார். கருத்தரங்கில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம், வி.எஸ். சுந்தரம் ,சுப்பிரமணியன், செல்வராஜ், சு.பழனிச்சாமி மௌனசாமி சுப்பிரமணியன், எம்.வி. ராஜன், ராபர்ட்ஸ் அஸ்ரப் அலி, திலீப்குமார் ,
நான்சி, கோமகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருத்தரங்கில் பேரூர் ஆதீனம் தலைவர் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார், கோவை மாவட்ட அனைத்து ஜமாத் பொதுச்செயலாளர் ஹாஜி முகமது அலி, தூய மைக்கேல் அதிதூதர் பேராலய பங்குத்தந்தை அருட்தந்தை ஜார்ஜ் தனசேகர், சாகித்ய அகாடமி விருதாளர் கவிஞர் புவியரசு, மேனாள் பொறுப்பாசிரியர் சிதம்பரநாதன், ஆகியோர் பேசினர். பல்சமய நல்லுறவு இயக்க ஒருங்கிணைப்பாளர் எம்.எம் ராமசாமி அனைவருக்கும் சிறப்பு செய்தார். இஸ்காப் மாநில பொருளாளர் கோட்டியப்பன் நன்றியுரை வழங்கினார்.