கேரள ஊரடங்கால் தமிழக வாகனங்கள் எல்லையில் நிறுத்தம் : வெறிச்சோடிய களியக்காவிளை.. போலீசார் எச்சரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
30 January 2022, 11:52 am

கன்னியாகுமரி : கேரளாவில் இன்று இரண்டாவது ஞாயிறு கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு தமிழகத்தில் இருந்து செல்லும் அனைத்து வாகனங்களும் எல்லை பகுதியான களியாக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளது.

கேரளாவில் இன்று இரண்டாவது ஞாயிறு கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு என்பதால் அத்தியாவசிய தேவைகளான காய்கறி , பால் உட்பட கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. மருத்துவம் விமான நிலையம் உட்பட அத்தியாவசிய தேவைகளுக்கான வாகனங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

கேரள அரசு பேருந்துகளும் இயக்கப்படவில்லை. தமிழகத்தில் இருந்து குமரி மாவட்டம் வழியாக கேரளா செல்லும் அனைத்து வாகனங்களும் தமிழக எல்லையான களியக்காவிளையில் நிறுத்தபட்டு மருத்துவமனை, பால் காய்கறிகள் கொண்டு செல்லும் வாகனங்கள், விமான நிலையங்கள் செல்லும் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே கேரளாவிற்கு செல்ல அனுமதிக்கபடுகின்றனர்.

தமிழக கேரள எல்லை சோதனைசாவடியில் தமிழக போலீசார் கேரள செல்லும் தமிழக வாகனங்களை தடுத்து நிறுத்தி அத்தியாவசிய வாகனங்கள் மட்டுமே செல்ல அறிவுரை கூறி வருகின்றனர்.

கேரளாவில் தமிழக வாகனங்களை கேரள போலீசார் நிறுத்தி செல்லும் காரணங்களை கேட்டு உரிய காரணங்களுக்காக சென்றால் மட்டுமே அனுமதிக்கின்றனர். தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் வாகனங்கள் எண்ணிக்கையும் குறைந்த அளவே காணப்படுகிறது.

கேரள ஊரடங்கு காரணமாக இன்று தமிழகம் ஊரடங்கு விலக்கு அறிவிக்கபட்டிருந்தாலும் தமிழக கேரள எல்லை களியக்காவிளை பகுதி வெறிச்சோடி காணபடுகிறது.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 2768

    0

    0