Nayanthara Hot, நயன்தாராவை மிஞ்ச இன்னொரு அழகி பிறக்க வாய்ப்பில்ல
Author: Udayachandran RadhaKrishnan30 January 2022, 1:03 pm
தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் என பல உச்ச நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறப்பவர் நயன்தாரா. இவரது கைவசம் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல், Connecting, மற்றும் இன்னும் சில படங்கள் உள்ளன.
இதில் விக்னேஷ் சிவன் தயாரிப்பு நயன்தாரா நடிக்கும் படமான நெற்றிக்கண் படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடித்து பெரிய பெயர் பெற்றுள்ளார். தற்போது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் காத்துவாக்குல 2 காதல் படத்தில் நடித்து வருகிறார். மேலும், அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் இயக்கும் படத்தில் ஹீரோயினாக கமிட்டாகி நடித்து வருகிறார் நயன்தாரா.
மேலும் ரஜினியுடன் நடித்துள்ள அண்ணாத்த படம் தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்று வரும் நிலையில், அந்த படம் OTT-ல் ரிலீஸ் ஆகியுள்ளது.
இந்நிலையில், அடுத்து இவர் நடிக்கும் படத்தின் தலைப்பாக ‘O2’ என வைத்துள்ளார்களாம். O2 என்பது ஆக்ஸிஜனைக் குறிக்கும். தற்போது ஒரு Lip balm Company ஒன்றை ஆரம்பித்து உள்ளார், மேலும் காதலர் விக்னேஷ் சிவனோடு நயன்தாரா துபாய் சென்று புதுவருடத்தை புதுப்பித்தார். மேலும் தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், “நயன்தாராவை மிஞ்ச இன்னொரு அழகி பிறக்க வாய்ப்பில்ல” என்று கூறி வருகின்றனர்.