கோவையில் பள்ளி வளாகத்தில் குடிநீர் தொட்டி அமைப்பதற்கு எதிர்ப்பு: மரத்தின் மீது ஏறி மாணவர்கள் போராட்டம்..!!

Author: Rajesh
30 January 2022, 2:00 pm

கோவை: பள்ளி வளாகத்தில் குடிநீர் தொட்டி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் மரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியில் மாநகராட்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி மைதானத்தில் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்காக மேல்நிலைத்தொட்டி கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளி மைதானத்தை ஆக்கிரமித்து குடிநீர் தொட்டி அமைக்க பள்ளி மாணவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று பள்ளி வளாகத்திற்கு சென்ற மாணவர்கள், திடீரென அங்கிருந்த மரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி மைதானத்தில் தொட்டி அமைத்தால், மாணவர்கள் விளையாட இடம் இருக்காது என்றும், எதிர்ப்பை மீறி தொட்டி அமைத்தால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் மாணவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே மாணவர்கள் போராட்டம் நடத்திய இடத்திற்கு எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன் சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 2510

    0

    0