ஒரு படத்திற்கே இப்படியா..! அடம்பிடிக்கும் சிம்பு..!

Author: Rajesh
30 January 2022, 6:14 pm

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் மாநாடு. இந்தப்படம் சிம்பு நடித்த திரைப்படங்களிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வசூலை குவித்த படமாகவும் மாறியுள்ளது. கடந்த வருடம் 100 கோடிக்கு மேல் வசூலித்த படங்களில் இப்படமும் ஒன்று. இந்நிலையில் நடிகர் சிம்பு மாநாடு படத்தின் வெற்றியால் தனது சம்பளத்தை எக்கச்சக்கமாக உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.

தன்னிடம் வரும் தயாரிப்பாளர்களிடம் 25 கோடி சம்பளம் கேட்டு வருவது, தயாரிப்பாளர்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தெரிந்த தயாரிப்பாளர்கள் என்றால் 20 கோடி கொடுப்பதாக இருந்தால் நான் படத்தில் நடிக்கிறேன் என்று சம்பள விஷயத்தில் அடம்பிடித்து வருகிறாராம். சிம்புவை போலவே மாநாடு திரைப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு நடிகர் எஸ் ஜே சூர்யா உள்ளிட்டோரும் தங்கள் சம்பளத்தை வெகுவாக உயர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi movie bookings அஜித்தின் விடாமுயற்சி கொண்டாட ரெடியா…படத்தின் புக்கிங் ஓபன்..குஷியில் ரசிகர்கள்..!
  • Views: - 2729

    1

    0