பெட்ரோல் பங்கில் செல்போன் திருடிய பிரபல கொள்ளையன் கைது : காட்டிக்கொடுத்த சிசிடிவி…!!

Author: kavin kumar
31 January 2022, 1:15 pm

சென்னை: வியாசர்பாடியில் பெட்ரோல் பங்கில் செல்போன் திருடிய பிரபல செல்போன் கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.

சென்னை வியாசர்பாடி 5 வது பள்ளத் தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்(56). இவர் கடந்த 25 ம் தேதி மாலை தனது காரில் வியாசர்பாடி முல்லை நகர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் டீசல் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது வண்டியை நிறுத்தி விட்டு வண்டியிலிருந்து கீழே இறங்கி டீசல் போடுவதை கண்காணித்துக் கொண்டிருந்தார். டீசல் போட்டு விட்டு மீண்டும் வாகனத்தில் அமர்ந்து வண்டியை எடுத்த போது வண்டியில் வைத்திருந்த செல்போன் காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில் எம்.கே.பி நகர் போலீசார் சம்பவ இடத்தில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் ராஜேந்திரன் டீசல் போடும் போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் செல்போனை திருடி செல்வது தெரியவந்தது. இதனையடுத்து சி.சி.டிவி கேமரா பதிவுகளை வைத்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், கொருக்குப்பேட்டை ச் சேர்ந்த வசந்த் (22) மற்றும் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்கின்ற சைக்கோ சங்கர் (22) ஆகிய 2 பேரையும் எம்.கே.பி நகர் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் ஏற்கனவே பல குற்ற வழக்குகள் உள்ளன. இதனையடுத்து இவர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த எம்.கே.பி நகர் போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 2315

    0

    0