பேத்திக்கு பாலியல் வன்கொடுமை : கொடூர தாத்தா கைது…! சிவகங்கையில் அதிர்ச்சி சம்பவம்…

Author: kavin kumar
31 January 2022, 7:55 pm

சிவகங்கை : மானாமதுரை அருகே பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியதாக தாத்தா போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பட்டத்தரசி கிராமத்தில் வசித்து வருபவர் ராசு (64). இவர் தன்னுடைய 13 வயது சொந்த பேத்தியை கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் மிரட்டல் விடுத்துள்ளார். இதனைத்தொடர்ந்து அச்சிறுமிக்கு தொடர்ந்து உடல்நிலை சரியில்லாமல் போனதையடுத்து சிறுமியின் பெற்றோர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது சிறுமியின் தாத்தா ராசு தான் தனது கர்ப்பத்திற்கு காரணம் என்றும், மிரட்டி பல முறை பாலியல் வன்கொடுமை செய்தது குறித்தும் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் மானாமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் மானாமதுரை அனைத்து மகளிர் போலீசார் சிறுமியின் தாத்தா ராசுவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Cool Suresh calls for Bigg Boss ban பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை பண்ணுங்க..கொந்தளித்த கூல் சுரேஷ்..!
  • Views: - 2448

    0

    0