அதிமுக 4வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு : கோவை, திருப்பூர், நாமக்கல்லில் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு
Author: Babu Lakshmanan1 February 2022, 11:05 am
சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான 4வது கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்.19ம் தேதி நடைபெற இருக்கிறது. 22ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. தேர்தலுக்கான வேட்புமனுக்கள் பெறப்பட்டு வரும் நிலையில், கூட்டணி மற்றும் இடப்பங்கீட்டை அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரளவுக்கு இறுதி செய்து விட்டன. இதையடுத்து, வேட்பாளர் பட்டியலும் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மட்டும் தனித்தனியே களமிறங்கிய அதிமுகவும், பாஜகவும் தங்களின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. இதுவரையில் 3 கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், 4வது கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ளனர். நாமக்கல், இராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், தாராபுரம், உடுமலை, பல்லடம், பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய நகராட்சிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது.