அன்று திருக்குறள், புறநானூறு…இன்று மகாபாரதம்: வரி செலுத்தும் மக்கள் நன்றி கூறிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!

Author: Rajesh
1 February 2022, 1:54 pm

டெல்லி: 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் உரையில் மகாபாரதத்தில் வரும் சாந்தி பருவத்தில் வரும் முக்கியமான வரிகளை மேற்கோள் காட்டி பேசினார்.

இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு என்ற திருக்குறளை கடந்த ஆண்டு மேற்கோள் காட்டி பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த ஆண்டு வரி செலுத்தும் அனைவருக்கும் நன்றி கூறினார் நிர்மலா சீதாராமன்.

2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் உரையில் மகாபாரதத்தில் வரும் சாந்தி பருவத்தில் வரும் முக்கியமான வரிகளை மேற்கோள் காட்டி பேசினார். தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன் மத்திய நிதியமைச்சராக ஆனதில் இருந்து, தனது பட்ஜெட் உரையை வாசிக்கும் போது ஏதாவது ஒரு சங்ககாலப் பாடல் வரிகளை மேற்கோள்காட்டியே வாசித்து வருகிறார்.

மத்திய நிதியமைச்சர் கடந்த 2019ஆம் ஆண்டு தனது பட்ஜெட் உரையை வாசிக்கும்போது, புறநானூற்று பாடலாசிரியர் பிசிராந்தையார் எழுதிய பாடல்களில் ஒன்றை மேற்கோள் காட்டினார்.

அதே போல் கடந்த 2020ஆம் ஆண்டு பட்ஜெட் உரையை வாசிக்கும் போது, திருக்குறளில் உள்ள முக்கியமான பாடலை மேற்கோள் காட்டி பட்ஜெட் தாக்கல் செய்தார். நோயில்லாதிருத்தல், செல்வம், விளைபொருள், வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் என இந்த ஐந்தும் நாட்டிற்கு மிக்க அழகாகும் என்று விளக்கம் அளித்தார்.

அதோடு, ஔவையாரின் ஆத்திசூடி என்ற நன்னெறியில் வரும் ‘பூமி திருத்த உண்’ என்ற வரியை மேற்கோள் காட்டி, விளைநிலத்தை உழுது அதில் பயிர் செய்து உண் என்று பொருள், அது போலத்தான் நமது மோடி அரசும் செயல்படுவதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.கடந்த 2021ஆம் ஆண்டு பட்ஜெட் உரையை வாசிக்கும் போது, மீண்டும் திருக்குறளில் வரும் இறைமாட்சி என்னும் அதிகாரத்தில் உள்ள குறளை மேற்கோள் காட்டினார்.

அதே போல் நடப்பு 2022ஆம் ஆண்டு பட்ஜெட் உரையை வாசிக்கும் போதும் மகாபாரதத்தில் வரும் சாந்தி பருவத்தில் உள்ள முக்கிய வரிகளை மேற்கோள் காட்டி பேசினார். மகாபாரதத்தில் வரும் சாந்திபருவத்தில் வரும் முக்கியமான வரிகளை மேற்கோள் காட்டி பேசினார். அஸ்தினாபுரத்தின் அரசனாகத் தருமருக்கு முடிசூட்டுவதும், புதிய அரசனுக்கு சமூகம், பொருளியல், அரசியல் ஆகியவை தொடர்பில் பீஷ்மர் வழங்கிய அறிவுரைகளும் இப் பருவத்தில் அடங்கியுள்ளன.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 2480

    0

    0