தலை முடி ‘விக்’கில் மறைத்து நூதன முறையில் தங்கம் கடத்தல் : புதுபுது டெக்னிக்குகளை கையாளும் கடத்தல் கும்பல்

Author: kavin kumar
1 February 2022, 6:40 pm

சென்னை தலை முடி விக்கில் மறைத்து வைத்து இலங்கையில் இருந்து சென்னைக்கு கடத்த முயன்ற 22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தி வருவதும் சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்குவதும் தொடர்கதையாகிவிட்டது. நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான அயன் படத்தில் வெளிநாடுகளில் இருந்து தங்கம், வைரம் கடத்துவது தொடர்பான காட்சிகள் இடம்பெற்றது. இப்படி எல்லாமா கடத்துவாங்க என ரசிகர்கள் மனதில் கேள்வி எழுந்தது. இதில் எல்லாம் வெறும் சாம்பிள் தான் என்கிற ரீதியில் இருக்கிறது கடத்தல்காரர்களில் டெக்னிக்குகள். விமான போக்குவரத்து வழியாக அதிகளவு தங்கம் கடத்தப்படுகிறது. ஒவ்வொரு முறையும் பிடிபடும் கடத்தல்காரர்கள் தங்கத்தை மறைத்து கொண்டு வர பல்வேறு டெக்னிக்குகளை பயன்படுத்துகின்றனர். இதனை எப்படியும் சுங்கத்துறை அதிகாரிகள் மோப்பம் பிடித்து விடுகின்றனர்.

இந்த நிலையில் கொழும்புவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் தங்கம் கடத்துவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து விமானத்தில் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் சந்தேகத்திற்கிடமாக வந்த 3 மூன்று பெண் பயணிகளிடம் சோதனை நடத்தினர். அப்போது பெண் ஒருவரின் தலையில் கொண்டை வடிவில் பொருத்தப்பட்டிருந்த விக்கிற்குள் தங்கத்தை பேஸ்ட் வடிவில் மறைத்து வைத்து கொண்டு வந்ததது தெரிய வந்தது. இதேபோல் மற்றொரு பெண்ணின் ஆடைக்குள் இருந்தும் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களிடம் இருந்து 22 லட்சம் மதிப்புள்ள 525 கிராம் கொண்ட தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 2298

    0

    0