TNPSC தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு: நிரந்தர பதிவெண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயம்..!!
Author: Rajesh2 February 2022, 8:46 am
சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களது நிரந்தர பதிவு எண்ணுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசு பணிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகின்றது. இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு எழுதும் தேர்வர்கள் தங்கள் டிஎன்பிஎஸ்சி நிரந்தர பதிவு எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
TNPSC இணையதளத்தில் OTR கணக்கு வைத்திருக்கும் தேர்வர்கள், அதனுடன் தங்கள் ஆதார் எண்ணை வரும் 28ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்றும், ஆதார் எண் இணைத்த உடன், இனி வரும் காலங்களில் OTR கணக்கு மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 28ம் தேதிக்குள் டிஎன்பிஎஸ்சி நிரந்தர பதிவெண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்படுள்ளது.