தேர்தல் பணிகளின் நிலை என்ன? கோவை மாநகராட்சி அலுவலகத்தில் ஆட்சியர் திடீர் ஆய்வு!!!

Author: Udayachandran RadhaKrishnan
2 February 2022, 6:10 pm

கோவை : மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுபாட்டு அறை, மற்றும் தேர்தல் அலுவலகத்தில் நடைபெறும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆய்வு செய்தார்.

கோவை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்தான அனைத்து செயல்பாடுகளையும் கண்டறிய மாவட்ட தேர்தல் கட்டுபாட்டு அறை, மற்றும் தேர்தல் அலுவலகம் டவுன்ஹால் பகுதியில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் செயல்பட்டு வருகினற்து.

தேர்தல் அலுவலகத்தில் 25 க்கும் மேற்பட்ட, பணியாளர்கள் தேர்தல் குறித்த அணைத்து தகவல்கள்களையும் பதிவு செய்யும் பொருட்டு இந்த அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இந்த பணிகளை இன்று கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, மாநகராட்சி துணைஆணையர் ஷர்மிளா ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இங்கு பதிவு செய்யப்படும் தகவல்கள் குறித்து, தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களிடம் கேட்டு கொண்டார், பின்னர் அதன் செயல்பாடுகள் குறித்தும் அவர் ஆய்வு செய்தனர்.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 1072

    0

    0