SMS கொரோனா விழிப்புணர்வு வாகனம் : கோவையில் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்!!
Author: Udayachandran RadhaKrishnan3 February 2022, 11:40 am
கோவை : கோவையில் கொரோனா விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கோவை சூரியன் எப்எம் சார்பில் எஸ்.எம்.எஸ் (SMS) என்ற கருத்தாக்கத்துடன் விழிப்புணர்வு வாகனம் துவங்கப்பட்டுள்ளது. கிருமினாசினி, சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் (Soap, Mask, Social Distance) என்ற வாசகத்துடனான இந்த விழிப்புணர்வு 3 வாகனங்களை மாவட்ட ஆட்சியர் சமீரன் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த விழிப்புணர்வு வாகனமானது கோவை முழுக்க சென்று ஒலிப்பெருக்கி மூலமாக கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்று சூரியன் எப்எம் நிர்வாகிகள் தெரிவித்தனர்.