கல்லூரி மாணவிகளுக்கு அடுத்தடுத்து வாய்ப்பு கொடுக்கும் திமுக : கோவையை தொடர்ந்து வேலூரிலும் 22 வயதான கல்லூரி மாணவி போட்டி

Author: kavin kumar
3 February 2022, 2:00 pm

வேலூர் : வேலூர் மாநகராட்சி 28-வது வார்டில், திமுக சார்பில் கல்லூரி மாணவி தேர்தலில் களம் காணவுள்ளார்.

வேலூர் மாவட்டத்தில், வேலூர் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றிற்கு வரும் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை அடுத்து, அனைத்து கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காகிதப்பட்டறை 28-வது வார்டில், வடக்குப் பகுதி வட்ட செயலாளர் குமார் என்பவரின் மகள் மம்தா குமார்(22) தற்போது திமுக சார்பில் களம் இறங்கியுள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி வேளாண்மை பொறியியல் படிப்பில் நான்காம் ஆண்டு பயின்று வருகிறார்.

இளம் வயது வேட்பாளர் என்பதால் காகிதப்பட்டறை 28-வார்டில் இவர் தற்பொழுது பேசும் பொருளாய் வலம் வந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், கல்லூரியில் படிக்கும் தமக்கு வேலூர் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்தார். மேலும் தான் கண்டிப்பாக இந்த தேர்தலில் வெற்றி பெறுவேன் என்றும், இந்த வார்டிர்க்கு அனைத்து வசதிகளையும் செய்து தருவேன் என்றும் கூறினார். என்னை நம்பி கொடுத்த இந்த பதவியை வெற்றி கனியாக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பாதங்களில் சமர்ப்பிப்பேன் என்றார்.

  • Naga Chaitanya Sobhita Marriage களைகட்டிய நாக சைதன்யா-சோபிதா திருமணம்..சமந்தா போட்ட திடீர் பதிவு.!
  • Views: - 1685

    0

    0