10ம் வகுப்பு படித்து விட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது… பீதியில் மக்கள்

Author: kavin kumar
3 February 2022, 6:50 pm

விருதுநகர் : விருதுநகரில் 10ம் வகுப்பு படித்து விட்டு மருத்துவமனை நடத்தி வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த போலி மருத்துவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் வேலுச்சாமி நகரை சேர்ந்தவர் சுப்பல் மிர்தா (48). இவர் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக விருதுநகரில் வசித்து வருகிறார். சுப்பல்மிர்தா விருதுநகர் மீனாம்பிகை பங்களா அருகே தனியாக மருத்துவமனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சுப்பல் மிர்தா 10ம் வகுப்பு வரை படித்து விட்டு ஆங்கில மருத்துவம் செய்வதாக புகார் எழுந்தது.

இந்த புகாரில் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் மனோகரன் தலைமையிலான மருத்துவ குழுவினர் சுப்பல் மிர்தா மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சுப்பல் மிர்தா 10ம் வகுப்பு வரை படித்து விட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாக மருத்துவம் பார்த்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து விருதுநகர் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் மனோகரன் அளித்த புகாரில் பேரில் விருதுநகர் மேற்கு காவல்துறையினர் சுப்பல் மிர்தாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்