பிறப்புறுப்பு பகுதியில் சோப்பு யூஸ் பண்ணலாமா… பெண்களே… உங்கள் கேள்விக்கான பதில் இதோ!!!
Author: Hemalatha Ramkumar4 February 2022, 7:00 pm
பெண்கள் தங்களின் பிறப்புறுப்பு சுகாதாரத்தை கவனித்துக் கொள்வதில் பெரிதும் கவனம் செலுத்துவதில்லை. ஆனால் அது நம் உடல் ஆரோக்கியத்தைப் போவே மிகவும் அவசியமான ஒன்று. ஆகவே ஒவ்வொரு பெண்ணும் தங்களின் பிறப்புறுப்பினை எப்படி சுத்தம் செய்ய வேண்டும், எந்த மாதிரியான தயாரிப்புகளை அந்த இடத்தில் பயன்படுத்தலாம் போன்றவை குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
இது மிகவும் அடிப்படையான விஷயம் மற்றும் முக்கியமானது. பிறப்புறுப்பு பகுதியில் இரசாயனம் கலக்காத சோப்புகளை பயன்படுத்துவது நல்லது. ஆர்கானிக் சோப்புகள் அல்லது மிதமான இன்டிமேட் வாஷ்கள் போன்றவற்றையும் நீங்கள் பயன்படுத்தலாம்.
இது போன்ற தயாரிப்புகளைப் பயன்படுத்தும் முன்பு அவற்றில் நறுமணம் இல்லை மற்றும் க்ளிட்டர் போன்றவை இல்லாத ஒன்றாக இருக்குமாறு பார்த்து கொள்ளவும். ஏனென்றால் நறுமணம் கலந்த சோப்புகள் மற்றும் வாஷ்கள் சென்சிடிவான பகுதிகளில் பயன்படுத்தும் போது அது அரிப்பை ஏற்படுத்தும். மேலும் சோப்புகள் மற்றும் வாஷ்களைக் கழுவ வெதுவெதுப்பான நீரை பயன்படுத்தவும்.
- கூடுதலாக பிறப்புறுப்பு பகுதியை சுத்தம் செய்யும் போது மேலிருந்து கீழாக அதாவது இடுப்பு பகுதியில் இருந்து தொடங்கி பிறப்புறுப்பு வரை பொறுமையாக சுத்தம் செய்ய வேண்டும். கீழிருந்து மேலாக சுத்தம் செய்தால் பின் பக்கத்தில் உள்ள அழுக்கு மூலம் தொற்று பரவ வாய்ப்புகள் அதிகம். இதன் காரணமாகவே மேலிருந்து கீழாக சுத்தம் செய்ய வேண்டும்.