நீட் தேர்வை அதிமுக எப்போதும் எதிர்க்கும்.. ஆனால் நீட் இவ்வளவு தூரம் வளர்ந்ததற்கு காரணம் திமுக – காங்கிரஸ்தான் : ஓபிஎஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 February 2022, 4:28 pm

நீட் தேர்வை பொருத்தவரை அதிமுக எப்போதும் எதிர்க்கும் என மதுரை மேலூரில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே பதினெட்டான்குடியில், மதுரை கிழக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழரசனின் மகன் திவாகர் திருமண விழாவில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் எஸ் பி வேலுமணி, ஆர்.பி உதயகுமார், செல்லூர் கே.ராஜூ, பாஸ்கரன், வைகை செல்வன், மற்றும் கட்சி பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.

இதில் மணமக்களை வாழ்த்திய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம். செய்தியாளர்களிடம் பேசுகையில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில் நீட் தேர்வை தொடர்ந்து எதிர்த்து வருகிறோம்.நேற்றும் எதிர்த்தோம் இன்றும் எதிர்த்து வருகிறோம். நாளையும் எதிர்ப்போம்.

நீட் தேர்வை தமிழகத்தில் விலக்கு அளிக்கும் வகையில் அதிமுக உறுதியாக எதிர்க்கும். இந்த அரசியல் சாசனப்படி ஆளுநர் நீட் மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளார்.

நீட் தேர்வு தமிழகத்தில் மிகப்பெரிய பாதிப்பை எதிர்த்து உண்டாக்கியுள்ளது. நீட் தேர்வு என்பது திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் மத்திய கூட்டாட்சியில் தான் கொண்டு வரப்பட்டது.அதனால் இவ்வளவு பெரிய விளைவுகள் ஏற்பட்டு உள்ளது.

அதற்கு முழு காரணம் திமுக காங்கிரஸ் தான். விளைவுகள் ஏற்படுத்தியதற்கு முழுமுதல் காரணமாக இருந்தவர்கள் காங்கிரஸ் திமுக மத்திய ஆட்சியில் நடந்தது தான் என்பது உண்மை.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ