உடல்நலக்குறைவால் மயங்கி விழுந்த காட்டு யானை: கோவை வனத்துறையினர் தீவிர சிகிச்சை..!!

Author: Rajesh
6 February 2022, 11:58 am

கோவை: உடல்நல குறைவால் மயங்கிய காட்டு யானைக்கு வனத்துறையினர் தீவிர ளசிகிச்சை அளித்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் ஆனைக்கட்டி சாலை பெரியதடாகம் அடுத்த அனுவாவி சுப்ரமணியம் கோவிலுக்கு செல்லும் வழியில் காட்டு யானை ஒன்று உடல்நல குறைவால் நடக்க இயலாமல் படுத்து கொண்டிருந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

Image

தகவலையடுத்து அங்கு சென்றுள்ள வனத்துறையினர் யானைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இது குறித்து வன மாவட்ட வன அலுவலருக்கும் கால்நடை மருத்துவருக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவ இடத்தில் காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

  • karthik subbaraj wrote the retro story for rajinikanth எழுதுனது வேற ஒருத்தருக்கு! ஆனா நடிச்சது வேற ஒருத்தர்- கார்த்திக் சுப்பராஜ் சொன்ன சீக்ரெட்?
  • Close menu