மறைந்த பாடகி லதா மங்கேஷ் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு: மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு..!!

Author: Rajesh
6 February 2022, 12:46 pm

மகாராஷ்டிரா: மறைந்த பாடகி லதா மங்கேஷ்கர் உடல் மும்பை சிவாஜி பூங்காவில் மாலை 6.30 மணிக்கு அரசு சார்பில் இறுதிச்சடங்குகள் நடைபெறும் என அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 92. இந்தி, தமிழ் என 36 மொழிகளில் பல்லாயிரக்கணாக்கான பாடல்களைப் பாடிய அவரது மறைவு இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவரது மறைவுக்குப் திரைப்பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாடகி லதா மங்கேஷ்கரின் உடலுக்கு இறுதி சடங்கு மராட்டிய மாநில அரசின் மரியாதையோடு நடத்தப்படும். மும்பை, சிவாஜி பூங்காவில் மாலை 6.30 மணிக்கு அரசு சார்பில் இறுதிச்சடங்குகள் நடைபெறும் என அரசு தெரிவித்துள்ளது.

லதா மங்கேஷ்கரின் மறைவை தொடர்ந்து 2 நாள் தேசிய துக்கமாக அனுசரிக்கப்படுவதாக கூறியுள்ள மத்திய அரசு, நாடு முழுவதும் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என அறிவித்துள்ளது.

  • no individual is bigger than the sport tweet by vishnu vishal கிரிக்கெட்டை விட தனிநபர் பெரியவர் அல்ல- CSK அணியை விளாசிய விஷ்ணு விஷால்