ஏரியில் மிதந்த இளம்பெண் சடலம்..! அடையாளம் வெளியிட்ட காவல்துறையினர்..!!

Author: kavin kumar
6 February 2022, 6:06 pm

கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அருகே ஏரியில் இளம்பெண்‌ சடலம் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் ஏரியில் இளம் பெண் சடலம் மிதப்பதாக அப்பகுதிமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் இளம்பெண்ணின் சடலத்தை மீட்டு கரைக்கு கொண்டு சேர்த்தனர்.இதையடுத்து இறந்துபோன பெண்ணின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சடலமாக மீட்கப்பட்ட பெண் சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த துரைசாமி மகள் யுவராணி (21) என்பது தெரிய வந்ததுள்ளது. மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், அந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டாரா…? அல்லது தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்தாரா…? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் சின்னசேலம் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 1111

    0

    0