பாண்டி பஜார் வணிக வளாகத்தில் தீ விபத்து ; குடும்பத்துடன் சிக்கி கொண்ட பிரபல சீரியல் நடிகர்…!

Author: kavin kumar
6 February 2022, 6:48 pm

சென்னை : பாண்டி பஜாரில் உள்ள வணிக வளாகத்தில் திடீர் தீ விபத்தை தொடர்நது, தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

சென்னையின் தி நகர் பாண்டி பஜார் பகுதியில் ஏராளமான கடைகளும், வணிக வளாகங்களும் செயல்பட்டு வருகின்றன. மக்கள் அதிகமாக பொருட்கள் வாங்க வரும் பகுதி என்பதால் எப்போது கூட்ட நெரிசலாக இந்த பகுதி இருக்கும்.இந்நிலையில் இன்று பாண்டிபஜார் சாலையில் உள்ள ஜவுளி கடை ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மூன்று தளங்களை கொண்ட வணிக வளாகத்தில், ஜவுளி கடை மற்றும் பைனான்ஸ் நிறுவன அலுவலகம் ஆகியவை தீப்பற்றி எரிந்து சேதமடைந்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது. வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் கட்டத்தில் சிக்கிக்கொண்ட கொண்ட 50 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இந்த நிகழ்வின் போது பிரபல சின்னத்திரை நடிகர் ஸ்ரீ தனது குடும்பத்துடன் வணிக வளாகத்திற்குள் சிக்கியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் , “2வது தளத்தில் உள்ள வழிபாட்டுக் கூடத்தில் நான் உட்பட பெரியவர்கள் குழந்தைகள் என பலரும் இருந்தோம். 12 மணியளவில் அந்த அறையில் புகை நுழைந்தது. அடுத்த 3 நிமிடங்களில் அறை முழுக்க புகை நிறைந்தது. வெளியில் வந்து பார்த்தபோது கீழே வர முடியாத அளவுக்கு புகை இருந்தது. எனவே மொட்டை மாடிக்கு அனைவரும் சென்று விட்டோம். பின்னர் சிறிது நேரத்தில் வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுப்படுத்தியதால் புகை குறைந்தது. பின்னர் எங்களை பாதுகாப்பாக கீழே அழைத்து வந்தனர்” எனக் கூறினார்.

  • Actress Sneha has a rare disease.. Prasanna praises her courage! நடிகை சினேகாவுக்கு அரிய வகை நோய்.. தைரியத்தை பாராட்டும் பிரசன்னா!