இனி பணியின் போது செல்போன் பயன்படுத்தினால் நடவடிக்கை: அரசுப்பேருந்து ஓட்டுநர், நடத்துனர்களுக்கு போக்குவரத்து துறை அறிவிப்பு..!!

Author: Rajesh
7 February 2022, 12:05 pm

சென்னை: செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு போக்குவரத்துறை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அரசுப்பேருந்து பயணத்தின் போது ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க போக்குவரத்துறை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அரசு பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.


செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில் போக்குவரத்துத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மேலும், நடத்துநர்கள், பின் இருக்கையில் அமர்ந்துகொண்டு, படிக்கட்டுகளில் யாரேனும் பயணம் செய்கிறார்களா, என்பதனையும், பயணிகள் ஏறும்போதும், இறங்கும்போதும் 2 படிகட்டுகளையும் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனை மீறும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!