விஜய் சேதுபதியால் தள்ளிப்போகும் திரைப்படம்.. செய்வதறியாமல் தவிக்கும் முன்னணி இயக்குனர்..!

Author: Rajesh
7 February 2022, 4:51 pm

நடிகர் விஜய் சேதுபதி அனைத்து மொழிகளிலும் பல படங்களில் நடித்து வருவதால், கமிட்டான ஒரு சில படங்களில் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முக்கியமாக, வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகி வரும் விடுதலை திரைப்படத்தினை மார்ச் மாசம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இதனிடையே விஜய் சேதுபதியால் இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போவதாக படக்குழுவினர் கூறி உள்ளனர். விஜய் சேதுபதி கண்டிப்பாக நடிக்கிறேன் கொஞ்ச நாள் டைம் கொடுங்கள் எனக் கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதில், பிரகாஷ்ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன் உட்பட பல நடிகர்கள் நடித்து இப்படத்தில் மிகவும் திருப்புமுனை ஏற்படுத்தும் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

  • ags condition for producing str 50 பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?