பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு : கமுதியில் முதல் வெற்றியை பதிவு செய்த பாஜக…

Author: kavin kumar
7 February 2022, 9:50 pm

ராமநாதபுரம் : 14-வது வார்டு வேட்பாளராக போட்டியிட்ட பாஜக கட்சியை சேர்ந்த சத்யா ஜோதிராஜா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி ஒரேகட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து மனுக்கள் மீதான பரிசீலனையும் நிறைவு பெற்றுள்ளது. வேட்புமனுவை திரும்பப் பெற இன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான கால அவகாசமும் முடிவடைந்துள்ளது.தற்போது மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் இறுதி வேட்பாளர் பட்டியல் படிப்படியாக வெளியிடப்பட்டு வருகிறது. இதற்கிடையில் போட்டியின்றி பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கு ராமநாதபுரம் மாவட்டமும் விதிவிலக்கல்ல. இம்மாவட்டத்தில் உள்ள கமுதி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் இருக்கின்றன. இதில் ஏராளமான வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் இன்று பாஜக வேட்பாளர் உட்பட 11 பேர் போட்டியின்றி தேர்வு பெற்றுள்ளனர்.இதில் 14-வது வார்டு வேட்பாளராக போட்டியிட்ட பாஜக கட்சியை சேர்ந்த சத்யாஜோதிராஜா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மேலும் சுயேட்சை வேட்பாளர்கள் 1-வது வார்டு மீனாட்சி, 4-வது வார்டு தேவிசதீஷ்குமார், 5-வது வார்டு உத்தண்ட சுரேஷ், 7-வது வார்டு அப்துல் வகாப் சகாராணி,

8-வது வார்டு கனிமலர் முத்துக்குமார், 10-வது வார்டு அந்தோணி சவேரியார் அடிமை, 11-வது வார்டு ஷேக் முகம்மது, 12-வது வார்டு ஹமீது மீராள் கௌசர், 13-வது வார்டு சித்ராநாகராஜ், 15-வது வார்டு திருக்கம்மாள் ஆகியோர் போட்டியின்றி தேர்வு பெற்றனர். இதில் கமுதி பேரூராட்சிக்கு 7 வது வார்டில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட அப்துல் வகாப் சகாராணி என்பவர் தலைவராகவும், 10வது வார்டில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட அந்தோணி சவேரியார் அடிமை என்பவர் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 1135

    0

    0