81 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் : 2 பயணிகளிடம் விசாரணை…

Author: kavin kumar
9 February 2022, 5:10 pm

திருச்சி : திருச்சி விமான நிலையத்தில் 2 பயணிகளிடம் இருந்து 81லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நேற்று இரவு திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு சார்ஜாவில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட
பயணிகளுடன் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது விமான நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக நடந்து கொண்ட இரு பயணிகளை தனியாக அழைத்து சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு பயணி தன்னுடைய உடைமையில் சுமார் 983.50கிராம் பசை வடிவிலான தங்கத்தை மறைத்து கொண்டு வந்ததை பறிமுதல் செய்தனர்.

அதன் மதிப்பு சுமார் 48 லட்சத்து 62 ஆயிரம் ரூபாயாகும், இதோ போல் மற்றொரு பயணியை சோதனை செய்த போது, அந்த நபர் பசை வடிவில் 668.600 கிராம் தங்கத்தை மறைத்து கொண்டு வந்ததை கண்டு பிடித்தனர். அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு சுமார் 33 லட்சம் ரூபாயாகும். இரு பயணிகளிடமும் இப்படிப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் 81லட்சம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து அதிகாரிகள் இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…