ஸ்ருதிஹாசனை மிஞ்சிய ஷங்கரின் மகள்… மேடையில் நடிகர்களின் வாயைப் பிளக்க செய்த வீடியோ..!!!

Author: Babu Lakshmanan
9 February 2022, 7:30 pm

இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் என்று சொன்னால் விரல்விட்டு எண்ணும் வகையில் சில இயக்குனர்கள் மிஞ்சுவார்கள். அதில் முக்கியமான இயக்குனர் என்று பார்த்தால் நம்ம ஊரு இயக்குனர் ஷங்கர். அவரது படங்களில் சமூகத்தின் மேல் இருக்கும் அவரின் கோபத்தின் வெளிப்பாடு நம்மளை பயமுறுத்த வைக்கும். இவரின் படங்கள் தமிழைத் தாண்டி பல மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்தியன் படத்திற்கு பிறகு மீண்டும் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். தற்போது Big Boss வேளைகளில் கமல் பிசியாக இருப்பதால் இந்த படத்தின் படிப்பிடிப்பு தள்ளிக்கொண்டே போகிறது. இவரது இரண்டாவது மகள் அதிதி சங்கர் நடிகர் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார்.

இந்த நிலையில், அதிதி நடித்த படங்கள் திரைக்கு வரும் முன்னரே அவர் தற்போது பாடகியாகவும் அறிமுகமாகியுள்ளார். தெலுங்கில் கிரண் கொர்ரபதி இயக்கத்தில் வருண் தேஜ் நடித்துள்ள ‘கானி’ படத்தில் ‘ரோமியோ ஜூலியட்’ என்ற பாடலை அதிதி ஷங்கர் பாடியுள்ளார்.

https://vimeo.com/675466597

இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், அதிதி ஷங்கர் பாடல் பாடியதுடன், நடனமும் ஆடி ஆடியன்ஸின் அப்லாஸைப் பெற்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?