மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானத்தை தடுக்க ஆளுநர் யார்…?கே.எஸ்.அழகிரி கேள்வி

Author: kavin kumar
9 February 2022, 11:07 pm

கன்னியாகுமரி : நீட் தேர்வு தமிழக மக்களின் உணர்வு என்றும், மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தை தடுக்க ஆளுநர் யார் என நாகர்கோவிலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக  காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் கேரளா மாநில எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி கூறுகையில், “நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் மகத்தான வெற்றிபெறுவார்கள் எனவும் ,மாபெரும் தலைவர்கள் பேசிய நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தவறாக பேசியுள்ளார் எனவும், நீட் தேர்வு வேண்டாம்  என்பது தமிழக மக்களின் உணர்வு, அதில் அரசியல் இல்லை, தமிழக அரசு பள்ளி மாணவர்கள் மாநில பாடதிட்டத்தில் படிக்கிறார்கள்.

ஆனால் நீட் தேர்வில்  மத்திய பாடதிட்டதிலிருந்து கேள்விகள் கேட்கபடுவதால் எவ்வளவு கெட்டிக்கார மாணவர்களாலும் பதில் எழுதமுடியாமல் போகிறது. தமிழகத்திலுள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் சிபிஎஸ்சி பாடதிட்ட கொண்டுவர பத்தாண்டுகள் ஆகும். எனவே தான் நாம் கேட்கிறோம். இது எங்கள் உரிமை மாணவர்களின் உரிமை நீட் தேர்வு நடந்தது என்றால் அதில், இந்திய அளவில் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும், மாணவர்கள் நல்ல வேலைக்கு செல்ல முடியாது ஐஏஸ், ஐபிஎஸ், மருத்துவராக முடியாது. இது நமது மண்ணில் உரிமை இதில் அரசியல் கிடையாது. ஒரு மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானத்தை தடுக்க ஆளுநர் யார்? குடியரசு தலைவர் யார் ?எனவும்,

மக்களிள் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டுமெவும், நான் பிரதமர் மோடியிடம் கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து இந்த விஷயத்தில் அரசியல் வேண்டாம் எங்களை வாழவிடுங்கள் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்குவந்தால் நீட் தேர்வு  அந்தந்த மாநிலங்களின் விருப்ப முடிவு எடுத்துகொள்ளலாம் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளதாகவும்  கூறினார்.

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 1055

    0

    0