சிவகார்த்திகேயனுக்கு இப்படி ஒரு மறுபக்கம் இருக்கா.? வெளிவந்த புதிய தகவல்…!

Author: Rajesh
10 February 2022, 1:04 pm

சின்னத்திரையில் திரையுலக பயணத்தை தொடங்கி, தற்போது வெள்ளித்திரையில் முன்னணி ஹீரோவாக உயர்ந்தவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் தான் டாக்டர். இந்த பட வெற்றியைத் தொடர்ந்து, டான், அயலான், சிங்கப்பாதை போன்ற படங்கள் உள்ளன. இது தவிர, கமலின் ராஜ்கமல் ப்ரொடக்ஷனில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். இதனிடையே நடிப்பதை தாண்டி பாடல்கள் எழுதுவது, படங்கள் தயாரிப்பது, பாடுவது என பல திறமைகள் கொண்டவராகவும் திகழ்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த கனா படத்தினை தயாரித்தார். நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்தில் ‘எனக்கு கல்யாண வயசுதான் வந்துடுச்சி’ என்ற பாடலை பலரது கவனத்தையும் ஈர்த்தார். தொடர்ந்து, டாக்டர் படத்தில் செல்லமா பாடலையும் தொடர்ந்து சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் படத்திலும், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்திலும் சிவகார்த்திகேயன் பாடல்கள் எழுதியுள்ளார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயனுக்கு பாடல் எழுதுவதற்காக வழங்கப்படம் சம்பளம் முழுவதையும், மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் குடும்பத்திற்கு வழங்கி வருகிறாராம்.
இந்த செய்தியை கேள்விப்பட்ட அவரது ரசிகர்கள் அனைவரும் சிவகார்த்திகேயனை மனதார பாராட்டி வருகின்றனர். கடந்த 2016 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் மறைந்த நா.முத்துக்குமாருக்கு இரண்டு பிள்ளைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?