பூ முடிச்சு.. பொட்டு வச்சு.. காஞ்சி பட்டுடுத்தி.. சுகாசினி Latest pics..!
Author: Rajesh10 February 2022, 6:20 pm
கமல்ஹாசனின் அண்ணன், சாருஹாசனின் மகள் தான் நடிகை சுஹாசினி.
நடிப்பில் தனக்கென தனி முத்திரை பதித்தது மட்டும் இன்றி, தயாரிப்பாளர் இயக்குனர் என பல்வேறு பரிமாணங்களில் தன்னுடைய திறமையை தமிழ் திரையுலகில் நிரூபித்துள்ளார்.

இவர் நடிப்பில் வெளியான ‘என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ ‘பாலைவனச்சோலை’ ‘சிந்து பைரவி’ ஆகிய படங்கள் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. மேலும், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். 1988 -ல் இயக்குனர் மணிரத்னத்தை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவருக்கு ஒரு மகன் உள்ளார்.
அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது பூ முடிச்சு பொட்டு வச்சு காஞ்சி பட்டுடுத்தி பதிவிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க’ என கமெண்ட்டில் தெரிவித்து வருகின்றனர்.