கட்டுக்குள் வரும் கொரோனா…. இன்றைய தமிழக பாதிப்பு நிலவரம் தெரியுமா..?

Author: kavin kumar
10 February 2022, 9:25 pm

சென்னை : தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் இன்று ஒரே நாளில் 3,592 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,592 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 3,971 ஆக இருந்த நிலையில் இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 3,592 ஆக குறைந்துள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 28 ஆயிரத்து 68 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 66 ஆயிரத்து 992ஆக குறைந்துள்ளது.
இன்று 25 பேர் உயிரிழந்துள்ளார்.

9 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 16 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து 862 ஆக அதிகரித்துள்ளது. இன்று 14, 182 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 33 லட்சத்து 23ஆயிரத்து 214ஆக அதிகரித்துள்ளது.இதில் அதிகபட்சமாக சென்னையில் 663 பேருக்கும், கோவையில் 654 பேருக்கும், செங்கல்பட்டில் 290 பேருக்கும், திருப்பூரில் 221 பேருக்கும், சேலத்தில் 189 பேருக்கும், ஈரோட்டில் 184 பேர் என கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!