கேட்டில் சிக்கி கால் முறிந்து உயிருக்கு போராடிய காட்டெருமை : வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் செய்த உதவி!!
Author: Udayachandran RadhaKrishnan11 February 2022, 12:53 pm
கொடைக்கானலில் கம்பி கேட்டில் சிக்கி காட்டு எருமை கால் முறிந்த நிலையில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் மற்றும் வனத்துறையினர் உதவியுடன் மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகர் பகுதியில் காட்டு மாடுகள் அவ்வப்போது நுழைந்து பொதுமக்களையும் சுற்றுலா பயணிகளின் அச்சுறுத்தி வருகிறது.
நேற்று கொடைக்கானல் பெர்ன் ஹில் சாலை பகுதியில் காட்டு எருமை மிரண்டு ஓடியதில் தனியார் பங்களா பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு கேட்டில் சிக்கியது.
இதனால் காட்டுமாட்டின் கால் முறிந்தது. இதுபற்றி தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து கேட்டில் சிக்கி உயிருக்கு போராடிய காட்டு மாடுக்கு மயக்க ஊசி போட்டு மீட்டனர்.
பின்னர் அப்பகுதியில் வாக்கு சேகரித்து கொண்டிருந்த திமுக வேட்பாளர் பிரபா ஷாமிலி வனத்துறையிடம் இணைந்து காட்டுமாடு மீட்க முயற்சி செய்தனர்..பின்னர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர்